sripavanகனகராயன்குளம் மாங்குளம் பிரதேசத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த பௌத்த சிலை உடைப்பு வழக்கு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் கே. சிறீபவன் விலகிக் கொண்டுள்ளார்.

பிரதம நீதியரசர் கே.சிறீபவன், நீதியரசர்களான புவனக்க அலுவிஹார மற்றும் கே.ரீ. கித்சிறி ஆகியோர் இந்த மனுவை விசாரணை செய்தனர். வடமாகாண முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், வடமாகாண ஆளுனர், பௌத்த சாசன அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணைகளை மேற்கொள்ளும் நீதியரசர் குழாமிலிருந்து விலகிக்கொள்வதாக பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார். இந்த மனு எதிர்வரும் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.