???????????????

லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் பயனாளிகளுக்கு 1,000,000 ரூபா பெறுமதியான 37 துவிச்சக்கரவண்டிகள் 118 குடும்பங்களுக்கு உடுபுடவைகள் மற்றும் 108 குடும்பங்களுக்க உலர் உணவு பொதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன

ஓம் சற்குரு சிறி சரவணபாபா சுவாமி அவர்களின் 37 வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க பிரிவில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெண்தலைமைத்துவ 1851 குடும்பங்களை கொண்ட அமைப்பாக அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் ஒன்றியத்தை சேர்ந்த தெரிவு செய்யபட்ட பயனாளிகளுக்கு இனிய வாழ்வு இல்ல மண்டபத்தில் வைத்து இவ் அறக்கொடை நிகழ்வு 01.10.2016 அன்று நடைபெற்றது. இவ் நிகழ்வின் போது பயனாளிகள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.இது போன்று கடந்த வருடம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் சங்கத்தின் திருமண மண்டபத்தில் யாழ் மாவட்ட விழிப்புலனற்றவர்களுக்கும் கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவு மண்டபத்தில் வன்னி விழிப்புலனற்றோருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் வைத்து முல்லைத்தீவு மாவட்ட இல்லங்களுக்கான அறக் கொடை நிகழ்வும் என கடந்த மாசி மாதம் லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் சுமார் 22 இலட்சம் பெறுமதியில் அறக்கொடை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் இல்ல சிறார்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள், இல்லங்களுக்குத் தேவையான பொருட்கள், பாரதி இல்ல தேவைக்காக மோட்டார் வண்டி, யாழ்ப்பாண விழிப்புலணற்றோர் சங்கத்திற்கு ஒலிக்கருவிகள் சீருடை துணிகள் பார்வையற்ற மாணவர்களுக்கான ஒலிப்பதிவு கருவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் உணவுகள் என்பன வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக வட்டு இந்து வாலிபர் சங்கத்துடன் இணைந்து போரினால் பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளுக்காக லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியம் பல்வேறு மனிதாபிமான அறக்கருமங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

???????????????

???????????????

???????????????

???????????????

???????????????

???????????????

???????????????

???????????????