gotabaya......முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. எவன்காட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலைக்கு அனுமதியளித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், சீனாவில் இடம்பெறும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள, தனது கட்சிக்காரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கோட்டாபயவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே சீனாவுக்கு செல்வதற்காக அவரது பாஸ்போட்டை விடுவிக்குமாறு சட்டத்தரணி நீதவானிடம் கோரினார். விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய எதிர்வரும் 5ம் திகதி முதல் 30ம் திகதி வரை கோட்டாபய வெளிநாடு செல்ல அனுமதியளித்துள்ளார்.