srilanka-swissஇலங்கை சுவிஸர்லாந்துக்கு இடையில் இருதரப்பு குடியேற்ற ஒப்பந்தம்கை ச்சாத்திடப்பட்டுள்ளது.

சுவிஸர்லாந்தின் நீதி அமைச்சர் சிமோட்டா சொமாரொஹா மற்றும் இலங்கையின் உள்துறை அமைச்சர் செனவிரத்ன பண்டார நாவின்ன ஆகியோருக்கு இடையில் குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சுமார் 50,000 இலங்கையர்கள் சுவிஸர்லாந்தில் புகழிடம் பெற்றுள்ளனர். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அதிகமான அங்கு வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இலங்கை அவர்கள் மீள தாயகம் திரும்ப வேண்டும் என விரும்புகின்ற நிலையில், சுவிஸர்லாந்தின் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு நாடுகடத்தப்படுபவர்கள் கைதுசெய்யவோ கடத்தப்படவோ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.