sdffgdfd“Wushu Sanda” சர்வதேச போட்டியில் இலங்கை சார்பாக வடமாகாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் தெரிவாகியுள்ளதுடன், மேற்படி நான்கு பேரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவின் மணிப்பூருக்கு பயணமாகவுள்ளதாக “Wushu Sanda” பயிற்றுவிப்பாளர் செ.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த “Wushu Sanda” பயிற்றுவிப்பாளர் செ.நந்தகுமார் உட்பட பாடசாலை மாணவர்களும் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.கொழும்பு மகரகம இளைஞர் விளையாட்டு உள்ளரங்கில் செப்டம்பர் 13, 14, 15 ஆகிய திகதிகளில் நடைபெற்ற அகில இலங்கை இளைஞர் தேசிய மட்ட “Wushu Sanda” போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற 4 பேரும், இலங்கை சீன Wushu நட்புறவு சங்கத்தினால் மணிப்பூரில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் “Wushu Sanda” சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.

சர்வதேச ரீதியாக நடைபெறவுள்ள இச்சுற்று போட்டிக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் “Wushu Sanda” போட்டியாளர்கள் எதிர்வரும் டிசம்பரில் இந்தியா செல்கின்றனர். குறித்த “Wushu Sanda” போட்டியாளர்கள் தமது பயிற்சியினை மேற்கொள்வதற்கும், உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.