திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பயணித்த வாகனம் தம்புள்ளை, பெல்வெஹர பிரதேச்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் லொறி ஒன்றின் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், அவரின் மகள், மகன், வாகனத்தின் சாரதி மற்றும் அவரின் செயலாளர் ஆகியோர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கண்டியில் இருந்து திருகோணமலை நோக்கி புறப்படும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.