dfsgfgfநல்லிணக்கம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கை, எதிர்வரும் 15ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என நல்லிணக்கத்திற்கான செயலணி குறிப்பிட்டுள்ளது.

இந்த இறுதி அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளதாக நல்லிணக்கத்திற்கான செயலணியின் அங்கத்தவர் காமினி வியன்கொட தெரிவித்துள்ளார்.நல்லிணக்கத்திற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கையில் நெறிப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த செயலணியின் அங்கத்தவர் கூறியுள்ளார். பிரதேச மட்டத்திலான செயலணிகள் உருவாக்கப்பட்டு, நல்லிணக்கத்திற்கான மக்களின் கருத்துகள் திரட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.