இலங்கை இளம் யுவதிகள் இருவர் ஓமான் நாட்டில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
தத்தமது குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொண்டிருந்த இரண்டு இளம் யுவதிகளும், செல்பி எடுக்க முயற்சித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வழுக்கி கீழே விழுந்ததையடுத்து, குறித்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் மற்றைய பெண் ஈடுபட்டுள்ளார்.இதன்போது அந்த யுவதியும் கீழே விழுத்துள்ளார். இருவரும் நீர் இருக்கும் ஆழமான இடத்தில் விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எவ்வாறாயினும் குறித்த யுவதிகள் இருவரையும் காப்பாற்றி சுல்தான் கபூஸ் மருத்துவமனையில் அனுமதித்த போதும், ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். அந்நாட்டிலுள்ள இந்திய பாடசாலையில் கல்விப் பயிலும் ஒரு யுவதியும், தனியார் பாடசாலையில் கல்விப் பயிலும் அவரின் நண்பியுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.