2முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலர் உணவு பொதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இதன்படி சண்டிலிப்பாய் சீரணி நாகபூசனி அம்பாள் ஆலயத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மூன்று குடும்பங்களுக்கு 30,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

1. ம.பிறேமலதா இடைக்காடு வள்ளிபுனம் எனும் முகவரியை கொண்ட இவரின் கணவர் கடந்த யுத்தத்தின் போது இறந்து விட்டார் இவருக்கு இரண்டு பிள்ளைகள் வயது முதிர்ந்த தாய் தந்தையும் இவரது பராமரிப்பில் வாழும் இவர் ஒருவேளை உணவிற்கு கூட கஸ்டபடுவதாக கூறியுள்ளார்.

2. சி.கணகம்மா தொட்டியடி விசுவமடு மேற்க்கு எனும் முகவரியை கொண்ட வயதான இவரின் கணவர் கடந்த யுத்தத்தின் போது இறந்து விட்டார் இவரின் மகளின் கணவரும் இறுதி யுத்தத்தின் போது இறந்து விட்டார் இதனால் மகளும் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி விட்டார் மகளுக்கு பாடசாலை செல்லும் 3 பிள்ளைகள் உள்ளனர் இவர்கள் யாவரும் சி.கணகம்மாவின் பாதுகாப்பில் உள்ளனர்.

3. தி.சறோஜினிதேவி தேவிபுரம் அ பகுதி எனும் முகவரியை கொண்ட இவரின் கணவரும் மகளும் கடந்த யுத்தத்தின் போது இறந்து விட்டார்கள் தற்போது கல்வி கற்கும் இரண்டு பிள்ளைகளடன் வாழ்ந்து வருகின்றார்.

இவ் அறப்பணியாற்றிய சண்டிலிப்பாய் சீரணி நாகபூசனி அம்மன் ஆலய நிர்வாகத்தினருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் பாதிக்கப்பட்ட முல்லை உறவுகளின் சார்பிலும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்

இந்து ஆலயங்கள் அறப்பணி செய்ய துர்க்கா தேவஸ்தானத்தை தொடர்ந்து சண்டிலிப்பாய் சீராணி அம்மன் ஆலயம் அறப்பணி செய்ய முன் வந்துள்ளமை பராட்டதக்க விடயம் இவ் ஆலயத்தை தொடர்ந்து ஏனைய இந்து ஆலயங்களும் முற்று முழுதாக அறப்பணி செய்ய முன் வரும்மானால் இப் பாதிக்கபட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரம் கல்வி போன்ற வற்றில் இருக்கின்ற பிரச்சனைகள் முற்று முழுதாக ஒரு சில வருடங்களில் தீர்க்கபட்டுவிடும். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

1 3