சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று சீனாவுக்கு பயணமாகியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெகுசன ஊடக மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆகியோரும் சீனா பயணமாகியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்கட்சியின் பிரதம கொரடாவுமான அநுர குமார திஸாநாயக்க, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோரும் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.