sdfdfdfஇலங்கையில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய ஒன்றாக அமையும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவிட்ஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க்வெல்டர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சுவிட்ஸர்லாந்தில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில், இலங்கை விடயத்தில் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகவும் சுவிஸ் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். தனது இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தின் நிறைவிடமான கண்டி தலதா மாளிகைக்கு சென்ற போது ஊடகங்குள்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த 8ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சுவிட்ஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க்வெல்டர் . ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். மேலும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்திருந்தார்.