வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்றுமாலை 6மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பிரதேச செயலகத்தின் மேல்மாடி பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்த 50இற்கும் மேற்பட்ட செட்டிகுளம் பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் அத்துடன் மேல்மாடி பகுதியில் இருந்த சில ஆவனங்கள் எரிந்துள்ளதாகவும் மின்னொழுக்கே இதற்கு காரணமாக இருக்குமெனவும் கூறப்படுகிறது. மேற்படி தீவிபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிகுள பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.