தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு நிதியத்தின் உதவியுடன், மாமடுச்சந்தி, பழம்பாசியில் “மரக்கறி பழம் பொதியிடல் நிலையம்” நேற்று (11.10.2016.) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், கந்தையா சிவநேசன், முல்லைதீவு அரசாங்க அதிபர், ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் நந்தசிறீ, மேலதிக விவசாயப் பணிப்பாளர் நாயகம், அனோம செனிவிரட்ன-உணவு உற்பத்தி பிரதிப் பணிப்பாளர், அற்புதசந்திரன்- கமநல விவசாய உதவி ஆணையாளர், சிவகுமார்- மாகாண விவசாய பணிப்பாளர், சிங்கநாயகம்- கூட்டுறவு திணைக்களம் மற்றும் பயனாளிகள் கலந்து சிறப்பித்திருந்தனர்.