மலையகத்தில் தொடரும் சம்பள உயர்வு உட்பட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா வாழ் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் இன்றயதினம் பேரணியொன்று சிந்தாமணி ஆலய முன்றலில் ஆரம்பமாகி வவுனியா பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆதரவு கோரிய கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதிக்குரிய மகஜர் கையளிப்புடன் ஆதரவு பேரணி நிறைவுபெற்றது.