lanka-philipineபிலிப்பைனஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் வீசா நடைமுறை தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் பிரிபெஃக்டோ யாசே மற்றும் இலங்கைத் தூதுவர் அருணி ரனராஜ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக, வெளிவிவகார திணைக்களம் கூறியுள்ளது. புதிய ஒப்பந்தத்தின் மூலம் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசாவை பெற்றுக் கொள்ளும் முறையில் இருந்து விளக்களிக்கக் கூடிய நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இருநாட்டு அதிகாரிகளும் முன்னூட்டிய விசா இன்றி 30 நாட்கள் வரை இரு நாடுகளிலும் தங்கிருக்கலாம். இவ்வருடம் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 55 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.