cctv (2)வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மகசின் சிறைசாலை வளாகங்களில் சி.சி.டி.வி கமெரா பொருத்தத் தீர்மானித்து, முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம், தற்போது கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலைகளுக்கு சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்கு 30 மில்லியன் ரூபாய் செலவாகும் என்பதனால் இவ் வேலைத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாரளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். எனினும், சி.சி.டி.வி கமெரா பொருத்துவதாகத் தீர்மானிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட மூன்று சிறைச்சாலைகளின் நுழைவாயில்களில் மாத்திரம், சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்குத் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இதனை இவ்வருட இறுதிக்குள் செய்து முடிக்கவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாரளர் குறிப்பிட்டுள்ளார்.