Header image alt text

cctv (2)வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மகசின் சிறைசாலை வளாகங்களில் சி.சி.டி.வி கமெரா பொருத்தத் தீர்மானித்து, முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம், தற்போது கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலைகளுக்கு சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்கு 30 மில்லியன் ரூபாய் செலவாகும் என்பதனால் இவ் வேலைத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாரளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். Read more

courtsகுற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர முன்வைத்த மனு தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தன்னைக் கைதுசெய்வதைத் தவிர்க்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு, தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தத்தை ஏற்படுத்துமாறு கோரிய இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

votesவெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள், இலங்கையில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார். Read more

courtsயாழ். தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமஅலுவலர் பிரிவில் கடமையாற்றும் பெண் கிராம அலுவலரை கடத்திய மூவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 13 மாத சிறைத்தண்டனை விதித்து, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி சிறீநிதி நந்தசேகரன், நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், கிராம அலுவலரின் சகோதரனை தாக்கி, அவருடைய 3 பற்களை உடைத்தமைக்காக ஒரு பல்லுக்கு 1 இலட்சம் ரூபாய் வீதம் 3 பற்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். Read more