மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட மூன்று குடும்பங்களுக்கு, அவர்களது தேவை கருதி வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக வலைகள் அடங்கலான ஒவ்வொன்றும் சுமார் 20,000 ரூபாய் பெறுமதியான உள்ளீடுகளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் வழங்கியுள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் அவர்கள் தனது 2016ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து இவற்றுக்கென ஒதுக்கீடு செய்து, வடக்கு மீன்பிடி அமைச்சினூடாக இவை கொள்வனவு செய்யப்பட்டன. மேற்படி பொருட்களை வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரனாதன் ஆகியோர் இணைந்து, மன்னாரில் உள்ள அமைச்சர் உப அலுவலகத்தில் வைத்து மேற்படி பயனாளிகளிடம் கையளித்துள்ளனர்.