தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முதியோர் தின சிறப்பு நிகழ்வு, கழகத்தின் அமைப்பாளர் திரு வ.பிரதீபன் தலைமையில் கனடா வாழ் சேமமடு உறவுகளின் பங்களிப்புடன், வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்தில் நேற்று (13.10.2016) வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் முதியோருக்கான பயணப்பொதிகளும், விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு முத்தையா கண்ணதாசன் ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் ஸ்ரீ.கேசவன், உறுப்பினர்களான கெர்சோன், சஞ்சீவன், பிரகாஷ்கர் ஆகியோருடன் ஆனந்த இல்லத்தின் நிமலன் மற்றும் ஆனந்த இல்ல முகாமையாளர் திருமதி ஜெயா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.