14699667_1812533855697729_1094427888_oதெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிச்சைப் பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனியென யாழ் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது.

நேற்று(13.10.2016) காலை 5.30மணியளவில் புளியங்குளம் நகரில் ஆரம்பமாகி காலை 7.30 மணியளவில் ஓமந்தை மத்திய கல்லூரியை அடைந்தது. இளைஞர் சேவைகள் மன்றத்தின் விளம்பர பதாகை நெடுங்கேணி இளைஞர்களிடம் இருந்து தமிழ் தேசிய இளைஞர் கழகம், ஓமந்தை இளைஞர் கழகம் மற்றும் ஐயனார் விளையாட்டுக் கழகத்தினரால் ஓமந்தையில் பெற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் ஒமந்தை மத்திய கல்லூரியினை அடைந்தது. சுமார் 5 மில்லியன் நிதியினை திரட்டும் நோக்கில் வடக்கில் இருந்து தெற்கிற்கு 28 தினங்கள் பயணிக்கவுள்ள இந்த நடைபவனி கடந்த (06.10.2016)வியாழக்கிழமை யாழ். பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கபட்டிருந்தது.

ஒரு நாளில் சுமார் 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் தூரத்தை கடக்கவுள்ள இவ் நடைபவனியானது பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம், மாங்குளம், வவுனியா மதவாச்சி, கல்முனை, குருணாகல், கொச்சிக்கடை, கொழும்பு, பாணந்துறை மற்றும் சீனிகம போன்ற நகரங்களை கடக்கவுள்ளது.

நேற்றுக்காலை வவுனியா ஒமந்தையை அடைந்த இந்த நடைபவனியை பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அனுசரணையாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வரவேற்று தங்களாலான நன்கொடைகளை வழங்கியதோடு, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரால் நடைபவனியில் பங்கு பற்றியவர்களுக்கு தண்ணீர் போத்தல்கள் மற்றும் குளீர் பானங்கள் வழங்கப்பட்டிருந்தது.

14647313_1812533902364391_45568553_o 14657741_1812533932364388_168533398_n 14658394_1812534059031042_965451424_n 14677890_1812533849031063_13207512_o 14689093_1812533869031061_985653798_o 14694922_1812533935697721_1798847158_n 14699981_1812534005697714_1959167083_n