abdul kalamஇந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியும் ஏவுகணை நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 85 வது பிறந்ததினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா தலைமையில் யாழ் பொது நூலகத்தின் இந்திய பகுதியில் இன்றுகாலை இடம்பெற்றது. இதன்போது யாழ் பொதுநூலகத்தில் உள்ள டாக்டர் .ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உருவச்சிலைக்கு இந்திய துணைத் தூதுவரினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அப்துல்கலாம் தொடர்பில் பாடசாலை மாணவர்களினால் விசேட பேச்சுக்களும், கலைகலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன் பேச்சு மற்றும் கலாசார நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாணவர்கள் இந்திய தூதுவரினால் கௌரவிக்கப்பட்டனர்.