94ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினம் முல்லைத்தீவு கற்சிலைமடு பாடசாலை அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் வடமாகாணசபை கௌரவ உறுப்பினர்கள் க.சிவநேசன் மற்றும் து.ரவிகரன் ஆகியோருடன் மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட கூட்டுறவு பணிப்பாளர் சுகசிங்கவும் பங்குபற்றினார்கள்.
இந்நிகழ்விற்கு மாவட்ட கூட்டுறவு தலைவர் திரு. சர்வானத்தராசா தலைமையேற்றிருந்தார். திரு.வேதாவனம் மற்றும் கூட்டுறவு தலைவர்கள் உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.