கிளிநொச்சியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் கி.ரதீஸ் என்ற வர்த்தகர் இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – இடைக்குறிச்சி – வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சியில் காணாமல் போயிருந்தார்.
குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள தனது பதிப்பகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் காணாமல் போயிருந்த நிலையில், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விடயம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.