ssssயாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீரில் உள்ள பிரச்சினைகள் மற்றும் குடிநீர் சம்பந்தமான குறைபாடுகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் தேசிய நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் விசேட பணிப்புரையின் கீழ் அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நீர் வழங்கல் அமைச்சின் பிரதி தவிசாளருமான சபீக் ரஜாப்தீன் தலைமையில் இது சம்பந்தமான குறைபாடுகள் குறித்து ஆராயப்பட்டன. இதன்போது யாழ். புதிய சோனகதெரு (பொம்மைவெளி) சுன்னாகம் நிலாவரை கிணறு ஊர்காவல்துறை, புங்குடுதீவு, வேலணை, அல்லைப்பிட்டி என பல பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு மக்கள் கருத்துக்களும் அறியப்பட்டது.

இந்த சந்திப்பில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொசான் தமீம், திட்டப் பணிப்பாளர் பாரதிதாசன், பொருளியலாளர் ஜெகதீசன் தொழில்நுட்ப அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.