nadesanமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்கை நிரூபமாவின் கணவரான திருக்குமரன் நடேசன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட அவரை பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகளை அடுத்த ஜனவரி 10ம் திகதி மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.