viladimir-putinஇலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருவதாக குறிப்பிட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலங்கைக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிரிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிற்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே ரஷ்ய ஜனாதிபதி புடின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற ரஷ்ய ஜனாதிபதி புடின், ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன, இந்த நட்புறவு தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.