வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் 17.10.2016 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் கல்விக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் திரு ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ்த்தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு முத்தையா கண்ணதாசன், ஆட்டோ சங்கத் தலைவர் சி.ரவீந்திரன், முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. இராசையா ரகுபதி ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.சுந்தரலிங்கம் காண்டீபன், உறுப்பினர் கெர்சோன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்விற்கு புளொட் அமைப்பின் பிரித்தானியா கிளை உறுப்பினர் திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.