2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 76,400 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மேன்முறையீடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அத்தாட்சிப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.