ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது தான் என கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியின் சடலத்தை இன்று தோண்டியெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவினை கல்கிசை நீதவான் இன்று பிறப்பித்துள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதற்காக அவரது சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கேகாலை கரடுபன – தெஹிபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ததாக தெரிவித்து, தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.