சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களின் கோரிக்கை தொடர்பில் பல்கலைகழக நிர்வாகத்தினர் உரிய தீர்வு வழங்காததன் காரணமாகவே அடையாள பணிபகஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்விசார ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கடந்தகாலங்களில் அரசியல் தலையீடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில் பல்கலைகழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் பதில் வழங்காவிடின் தொடர் பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் யாழ் பல்கலைகழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.