NPC (4)வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

வடமாகாண சபையை பலப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆசிய மன்றத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலத்திரனியல் நூலகம், சட்டவள நிலையம் என்பன அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. இந்நிகழ்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) வடமாகாண சபை பேரவைச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.