இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இராஜதந்திரத்தை பயன்படுத்தி இந்திய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை வெளிநாடுகளில் மேற்கொள்ளும் கொள்கையின் கீழ் இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சீனா இலங்கையில் மேற்கொள்ளும் வர்த்தகத்துக்கு ஈடான வர்த்தகத்தை தேடுவதே ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருவதன் நோக்கமாகும் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. எது எவ்வாறிருப்பினும் தமது விஜயத்தின் போது ஜெய்சங்கர், சர்ச்சைக்குரிய இந்திய – இலங்கைக்கு இடையிலான எட்கா உடன்படிக்கை குறித்து எந்தவித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கமாட்டார் என இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.