vijayakalaஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பாதா காசிம் அல் முல்லா மற்றும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சிறுவர்கள் மற்றும் விதவைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

யுத்தத்தினால் வடக்கிலுள்ள மக்களின் சுகாதார மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து பெரும் தேவைப்பாடு ஏற்பட்டுள்ளதாக, இதன்போது அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் காரணமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை சிறுவர் அபிவிருத்தி மற்றும் சமூக நலத்துறை என்பது மிகவும் முக்கியமான விடயம் என ஐக்கிய அரபு இராஜ்ஜிய இலங்கைக்கான தூதுவர் பதிலளித்துள்ளார்.