எவன்கார்ட் தலைவர் நிசாங்க சேனாதிபதி வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த உத்தரவினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. வைத்திய சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றத்திடம் நிசாங்க சேனாதிபதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆயுதக்கொள்வனவு மற்றும் அரசாங்கத்திற்கு 11.3 பில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் இவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றதுடன், இவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.