rita-sampanthanயுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பது அவசியமானது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை விடுவித்தல், மீள்குடியேறும் மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுத்தல் வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையோர் விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசக்குடனான நேற்றைய சந்திப்பின்போதே சம்பந்தன் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருவதாக, இதற்கு பதிலளித்த ரீட்டா ஐசக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் முகம்கொடுத்து வரும் வேறு பல பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.