ritaஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் ஐசக் ரீட்டா இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களாக கண்காணிக்கப்பட்ட பல விடயங்கள் தொடர்பிலும், பரிந்துரைகள் தொடர்பிலும் இங்கு அவர் தெளிவுபடுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் ஐசக் ரீட்டா குறுங்கால மற்றும் நீண்ட காலத்திற்கான பரிந்துரைகளை முன்வைத்தார். குறிப்பாக பொலிஸ், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளின் சேவைகள் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.