ssssஇலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லை தொடர்பான 27 ஆவது கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் கடற்படையின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு இருநாட்டு கடற்படை பிரதிநிதிகளுக்கும் இடையில் காங்கேசன்துறை கடற்பரப்பில் இந்திய கடற்படைக்கு சொந்தமான முயனஅயவவ கப்பலில் இடம்பெறுகின்றது. இதன்போது இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பிலும் பாதுகாப்பு தகவல் பரிமாற்றங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.