உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவித தேவைப்பாடும் இல்லை என்று பெபரல் அமைப்பு கூறியுள்ளது. இதன்காரணமாக அரசின் சில அதிகாரிகள் கூட அசௌகரியத்திற்கு உள்ளாகியிருப்பதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.
இது சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை எல்லை நிர்ணய குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.