பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்திற்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையை தீர்க்கும் நோக்கில், பிரதமர் அந்த அமைப்புக்களுடன் சந்திப்பை நடத்தவுள்ளார். தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் ஏற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிவில் அமைப்புக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அண்மைக் காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.