மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு-திருகோணமலை வீதியில் சிவகீதா பிரபாகரனால் நடத்திச் செல்லப்பட்ட விடுதியொன்றில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக சந்தேகிக்கப்பட்டே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது, சிவகீதா பிரபாகரன், அவரது கணவன் உள்ளிட்ட 7 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அறைகள் வாடகைக்கு விடப்படும் என்ற பெயரில் முன்னாள் முதல்வரின் வீட்டின் ஒரு பகுதியில் வைத்து இரண்டு பெண்களும் ஐந்து ஆண்களும் பிடிக்கப்பட்டதோடு,
அதனைத் தொடர்ந்து சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் பிரபாகரன் ஆகியோரும் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.