chennaiதமிழகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மே 17 இயக்கத்தினர் இன்று முற்றுகையிட்டனர்.

யாழ்ப்பாணத்தில்இரண்டு தமிழ் மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கத்தினர் இன்றையதினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.