bodyபாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் ஹோகந்தர பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீரவன்சவின் புதல்வரது நண்பரான 24 வயதுடைய லஹிரு திஸாநாயக்க என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து போகும் குறித்த இளைஞர் நேற்றிரவும் அங்கு தங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.எவ்வாறாயினும் வீரவன்சவின் மனைவி இன்று பகல் குறித்த இளைஞனை ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சித்த போதும், ஏற்கனவே அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டார்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய தலங்கம பொலிஸார், வீரவன்சவின் மனைவி சஷp வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.