eastern provinceயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவித்து கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை இம்மாத அமர்வுக்காக துனை அவைத்தலைவர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் வியாழக்கிழமை கூடியது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜெ. ஜனார்த்தனன் இவ் உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையை சபையில் முன் வைத்தார். இப் பிரேரணை மீது மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், எதிர்க்கட்சித் தலைவர் எம். எஸ். உதுமான்லெப்பை ஆகியோரும் உரையாற்றினர். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற நீதி விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்த பிரேரணை கூறுகின்றது.

இப்பிரேரணை ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் போலிஸ் மா அதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என துனை அவைத்தலைவர் பிரசன்னா இந்திரகுமார் அறிவித்தார்.