பிரான்சின் வடக்கு பகுதியில் இருக்கும் கலே நகருக்கு அருகேயுள்ள சர்ச்சைக்குரிய குடியேறிகள் முகாம் அழிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த முகாமில் இரு பெரும் தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
ஏறக்குறைய வெறிச்சோடிக் கிடக்கும் ‘ஜங்கிள்’ என்று அறியப்படும் இந்த முகாமிலிருந்து இந்த வாரம் சுமார் 6 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சில குழந்தைகள் உள்பட 80 குடியேறிகள் இன்னும் அங்கு இருக்கின்ற ஒரு பள்ளியிலும், ஒரு மசூதியிலும் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்று அறக்கட்டளை அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.கலே முகாமிலிருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் வெள்ளிக்கிழமை நிறைவு பெறும் என்றும் வெளியேற மறுப்போர் கைது செய்யப்படுவர அந்நகர் காவல்துறை ஆணையாளர் பேட்ரிக் விஸ்ஸர்-போர்டன் தெரிவித்திருந்தார்.
கலே முகாமை முற்றிலும் அழித்துவிடும் பணிகள் தொடர்கின்றன. திங்கள்கிழமை அந்த பணிகள் நிறைவடையும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.