
இவ் இன்றைய நிகழ்வுகளில் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் முழுமையான முயற்சியில் திருநாவற்குளம் இளைஞர் கழக இளைஞர்களின் பங்களிப்புடனும் இவ் சமூக பணி முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா இரத்த வங்கியில் கடும் இரத்த தட்டுப்பாடு நிகழும் இவ் வேளையில் இளைஞர்களின் இவ் மகத்தான பணி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), அவர்களும் சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், கழகத்தின் ஆலோசகர் திரு.மு.கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.