இருளான காலத்தில் இருந்து வெளிச்சமான காலத்தை நொக்கி நாம் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
எனினும் தாம் வெளிச்சத்தை முழுமையாக அடைந்து விட்டதாக கூறமாட்டேன் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்நது உரையாற்றிய அவர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தி கீழ் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் ஒருமித்தும் வாழக் கூடிய தீர்வொன்று கிடைக்குமென்ற அவர் கூறுகின்றார்.
தற்போதைய நல்லாட்சியில் வெளிச்சம் தென்படத் தொடங்கியுள்ளது. அடுத்தமுறை தீபாவளி பண்டிகையின் போது, இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்