வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன் அவர்களின் தலைமையில், தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு வி.யோகநாதன் முன்னிலையில் 29.10.2016 சனிக்கிழமை கழக மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தீபாவளி தினத்தில் சமூக பணிகளையும், கலாசார நிகழ்வுகளையும் அத்துடன் வித்தியாசமான முறையில் துடுப்பாட்ட, கரப்பந்து விளையாட்டுகளினை ஒழுங்கமைத்து இந்த வருட தீபாவளியினை சிறப்பாக சமூகத்துடன் இளைஞர்கள் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா இரத்த வங்கியின் அவசர வேண்டுகோளின் அடிப்படையில் கழகத்தின் செயலாளர் திரு லி.சியாமளனின் ஒழுங்கமைப்பில் இரத்ததான நிகழ்வான இவ் உன்னத பணி முன்னெடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் இறுதி போட்டியில் தரணதீபம் எதிர் ஐயனார் விளையாட்டுக்கழகம் என்பன மோதிய ஆட்டத்தில் ஐயனார் விளையாட்டுக்கழகம் வெற்றியை தனதாக்கியது.
அதனைத்தொடர்ந்து கரப்பந்து போட்டியின் இறுதி போட்டியில் விநாயகர் விளையாட்டுக்கழகம் எதிர் மலர்மகள் விளையாட்டுக்கழகம் என்பன மோதிய போட்டியில் விநாயகர் விளையாட்டுக்கழகம் வெற்றியைத் தனதாக்கியது.
தொடர்ந்து சமூகத்தின் தேவை கருதி மர நடுகை செயற்றிட்டம் பலரின் ஆதரவுடனும் வரவேற்புடனும் முன்னெடுக்கப்பட்டது.
சிறப்பு நிகழ்வுகளாக சறுக்கு மரம் ஏறுதல், தலையணைச் சண்டை, தாம்பிழுத்தல், சங்கீத கதிரை, முட்டி உடைத்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .
இவ் சமூக நிகழ்வுகளின் பிரதம அதிதியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களுடன் சிறப்பு அதிதியாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு இளைஞரணி செயற்பாட்டாளருமான திரு சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
கௌரவ அதிதிகளாக கிராம சேவையாளர் திரு ப.உமாபதி, ஆசிரிய ஆலோசகர் திரு மகேஸ்வரன், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ரவீச்சந்திரன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன், ஹீரோ மோட்டார் சைக்கிள் காட்சியாக முகாமையாளர் திரு எஸ்.பிரசாத், வர்த்தகர் எஸ்.யோகராஜா, ஐங்கரன் பந்தல் சேவை உரிமையாளர் திரு எம்.மகேந்திரன் ஆகியோருடன் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.