swordயாழ். பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் உள்ள சிறிய கடைக்குள் நேற்றிரவு புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது கடை உரிமையாளர் தன்னை பாதுகாத்து கொண்ட நிலையில் காயமின்றி தப்பிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், தாக்குதலின் போது கடையில் இருந்த கண்ணாடிகளை தாக்குதல்தாரிகள் அடித்து நொருக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தாக்குதலை மேற்கொண்ட மூவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், மூவரும் முகங்களுக்கு கறுப்பு நிறத்திலான துணி கட்டியிருந்ததாகவும், கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.