mangalaவெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசாரணை அதிகாரிகள் குழுவொன்றை வெளிவிவகார அமைச்சு நியமித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்தில், வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் இராஜதந்திரிகள் மற்றும் கொன்சூலர் அலுவலக அதிகாரிகளின் செயற்பாடுகளை ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு முன்வைத்த பரிந்துரையின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிவிவகார சேவையில் இருந்து ஒய்வுபெற்ற அதிகாரிகளான சி.டி.கசி செட்டி, ஜி.விஜயசிறி மற்றும் கீதா டி சில்வா ஆகியோர் புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.