ராடா நிறுவனத்தின் ஊடாக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், சாலிய விக்ரமசூரிய, ஜயன்த டயஸ் சமரசிங்க உள்ளிட்ட மூவரையும் நவம்பர் மாதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பேதே நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததால் குறித்த மூவரும் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். பொதுச் சொத்து சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதிமன்றில் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் பிரதான சந்தேகபர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதனால் பிணை வழங்குமாறு டிரான் அலஸ் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கூறியிருந்தார். விடயங்களை ஆராய்நத நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன, சந்தேகநபர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.